சோழவந்தான் அருகே தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி

சோழவந்தான் அருகே தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி
X

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பேசினார்.

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் சோழவந்தான் பேரூர் சார்பாக தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது .

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், திருவேடகத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொகுதி பொறுப்பாளர் சம்பத் ,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டப் பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், சிபிஆர் சரவணன், விவசாய அணி வக்கீல் முருகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், பால் கண்ணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஒன்றிய அவைத் தலைவர் மேலக்கால் சுப்பிரமணியன், பி ஆர் சி ராஜா, மாணவரணி பன்னீர்செல்வம், தென்கரை சோழராஜா, முள்ளி பள்ளம் ஞானசேகரன், குருவித்துறை மணிவேல், ஐயப்பன், நாயக்கம்பட்டி தமிழ், காடுபட்டி ஆனந்தன், ராயபுரம் சிறுமணி, திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் உள்பட தி.மு.க.வினர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் சந்திரன் பேலஸில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி, இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் ,கலைஞர் கருணாநிதி ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழாவில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதில் வெங்கடேசன் எம் .எல். ஏ .தொகுதி பொறுப்பாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ,பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். மாவட்டப்பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், அவைத் தலைவர் தீர்த்தம், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பேட்டை பெரியசாமி, முன்னாள் பேரூராட்சி செயலாளர் முனியாண்டி, இளைஞர் அணி வெற்றிச்செல்வன், மாணவரணி எஸ். ஆர். சரவணன்,பகுதிச்செயலாளர் மருது பாண்டியர் , கொத்தாளம் செந்தில், செல்வராணி, மில்லர், குருசாமி, எஸ் .எம் .பாண்டி, சுரேஷ், சங்கங்கோட்டை சந்திரன், ரவி, முட்டை கடை காளி, கௌதமராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!