திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு மூன்று சக்கர வாகனங்களை மேயர் வழங்கல்
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய மூன்று சக்கர சைக்கிள்களை, மேயர் வ.இந்திராணி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய மூன்று சக்கர சைக்கிள்களை, மேயர் வ.இந்திராணி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்:
மதுரை மாநகராட்சி செல்லூர் வாகன காப்பகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 342 காம்பேக்டர் குப்பை தொட்டிகளை, மேயர் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , துணை மேயர் தி.நாகராஜன், பயன்பாட்டிற்கு வழங்கினார்கள்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகளை வீடுகள்தோறும் சேகரிப்பு செய்வதற்கு 15வது மத்திய நிதிக்குழு (2020-2021) திட்டத்தின் கீழ் 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் ரூ.59.80 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை, மேயர், ஆணையாளர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகியோர் கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைத்தனர்.
குப்பைகளை எளிதில் அகற்றுவதற்கு, புதிய காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் 600 எண்ணம் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டு அதில் முதல்கட்டமாக 342 எண்கள் வார்டுகளுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளின் போது, 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகமணி உடனிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் சங்கீதா, நகர்நல அலுவலர் மரு.ராஜா, நகரப்பொறியாளர் (பொ) அரசு, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்,
அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (வருவாய்) (பொ) ஆறுமுகம், செயற் பொறியாளர்கள் பாஸ்கர், பாக்கியலெட்சுமி, கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு,உதவி கல்வி அலுவலர் இராஜேந்திரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் சேகர்,மனோகரன், சுப்புத் தாய், முருகேசபாண்டியன், காமராஜ், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன்,சிவசுப்பிரமணியன், விஜயகுமார் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu