மதுரை மாநகராட்சி பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய மேயர்

மதுரை மாநகராட்சி பள்ளியில்  விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய மேயர்
X

மதுரை மாநகராட்சி பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 64 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு) 11 ஆம் வகுப்பு பயிலும் 351 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன் வசந்த் வழங்கினார்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் நூார்ஜஹான், தலைமை ஆசிரியர் மேரி கரோலின், ஆசிரியர்கள் உட்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!