மதுரை அருகே சூராயி அம்மன் காேவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை அருகே சூராயி அம்மன் காேவில் மகா கும்பாபிஷேக விழா
X

மதுரை அருகே அருள்மிகு ஸ்ரீ சூராயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை அருகே அருள்மிகு ஸ்ரீ சூராயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு, உட்பட்ட கண்டுகுளம் கிராமத்தில் அமைந்திருக்கும் சேடபட்டி சாத்தங்குடி கண்டுகுளம் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீ சூராயம்மமன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், 1000-த்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பயபக்தியுடன் சூராயி அம்மன் மற்றும் லாட நாசி மார்நாடு கருப்பசாமி தெய்வங்களை வழிபட்டனர். இவ்விழாவில், ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவினை, தங்கதுரை வழக்கறிஞர் மற்றும் சேடபட்டி அழகுமலை கணேசன் சாத்தங்குடி கிராம மக்கள் பெத்தனன் கண்டு குளம் பாண்டி ஆகியோர் முன்நின்று கிராமத்தில் ஒன்றுகூடி கும்பாபிஷேக விழாவை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட அலப்பலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கம்பராய பெருமாள் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில், முருகன் மற்றும் கிராம மகாஜனங்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் முன்னாள் சார்பு ஆய்வாளர் உக்கிரபாண்டி முன்னின்று, ஆர்வத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்ய வழிவகுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், பக்தர்களுக்கு பெருமாள் நானயம் அபிசேக பிரசாத பை வழங்கினர். பக்தர்கள் பயபக்தியுடன் வழிபாடு செய்து பிரசாதங்களை பெற்றுசென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!