மதுரை அருகே அலங்காநல்லூர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

மதுரை அருகே அலங்காநல்லூர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
X

மதுரை மாவட்டம் ,திருமங்கலம் அருகே சங்கிலி கருப்புசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்.

மதுரை அருகே அலங்காநல்லூர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ அன்னை பராசக்தி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்:

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி மற்றும் அன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோயிலில் , 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 22 ஆம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்களும் ஐந்து கால யாகசாலை பூஜைகள் கோவில் முன்பு நடைபெற்றன .

அங்கு கலசத்தில் உள்ள தீர்த்தங்களை வேத, விற்பன்னர்களால் பூஜிக்கப்பட்ட பின்பு, காலை 10 மணி அளவில் கோவில் கோபுரத்தின் மேல் உள்ள கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை வேதாச்சாரியார்கள் சம்ப்ரோஷணம் செய்தனர். பின்பு, தீர்த்தங்களை கோவில் சுற்றி உள்ள ஏராளமான பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், டி. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி , திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்

கொண்டனர். இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் சார்பாக கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது...

அருள்மிகு அம்மாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, வாவிடமருதூர் அருள்மிகு அம்மாச்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முன்னிட்டு, கோயில் முன்பாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கடஸ் ஸ்தாபனம், கும்ப பூஜை, முதல் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, ஆகிய பூஜைகளும், இரண்டாம் கால யாக பூஜைகள், யாத்ரா தானம், கடம் புறப்பட்டு, கோயில் வலம் வந்து, கோயில் கோபுரங்களில் புனித நீர் ஊட்டப்பட்டது. இதில், ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

மகா கும்பாபிஷே முன்னிட்டு, கோயில் விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, அம்மாச்சி ஆலய பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு