மதுரை கீரைத்துறை இளம் தொழில் முனைவோருக்கு சாதனையாளருக்கான விருது
மதுரை இளம் தொழில் முனைவோருக்கு சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது,
மதுரை கீரைத்துறை பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ம.இளங்கோ (வயது32.)இவர், மதுரையை மையமாகக் கொண்டவர். கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் , செல்போன் பழுதுநீக்கும் சுயதொழில் செய்து கொண்டு, மதுரை நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை நிர்வாகவியல் (எம்.பி.ஏ) பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், மதுரையில் யுவஸ்ரீ கலா பாரதி விருது பெற்று இருக்கிறார். இவர் பல நாட்களாக கனவு கண்ட, 2016 ம் ஆண்டில் 'கொஞ்சும் கெஞ்சல்' என்ற புத்தகத்தை இளம் வயதிலேயே வெளியீடு செய்து சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து, தேனியில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் 7.ம் ஆண்டு விழா 2020.ல் நடைபெற்றது. இதில், முதல் புத்தகத்தை வெளியீடு செய்தமைக்காக, 'அசோக மித்திரன் நினைவு படைப்புக்கான விருது' இளங்கோவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர், செல்போன் உதிரி பாகங்கள் மொத்த விற்பனை செய்து வருகிறார். முற்போக்கு சிந்தனையாளர் தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். 2 வது புத்தகம் 2021 ஆண்டு 'நெஞ்சை சுட்ட குட்டி கதைகள்' என்ற புத்தகத்தை வெளியீடு செய்து சாதனை படைத்தார்.
சென்னை பகுதியில் உள்ள காமராஜர் அரங்கத்தில் டிச.17ஆம் தேதியன்று "அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை 2023" ஆம் ஆண்டிற்கான சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் இளம் தொழில் முனைவோர் விருதினை, சமூக ஆர்வலரும் தொழில் முனைவோருமான மா.இளங்கோவிற்கு வழங்கி கௌரவித்தார்.
இதுகுறித்து இளங்கோ கூறுகையில் “உலகெங்கிலும் உள்ள தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு மதிப்புமிக்க அமைப்பிடமிருந்து இந்த விருது மூலம் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வணிக உலகுக்கும், சமூகத்துக்கும் மேலும் பங்களிப்பு வழங்க இந்த விருது ஒரு உந்துதலாக இருக்கிறது’’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu