மதுரை: தலைமை ஆசிரியர்கள் சங்கக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
தலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்.
மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள அருணாச்சலம் பள்ளியில் தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜன் வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் நாகலிங்கம் மற்றும் மாநில அமைப்புச் செயலர் சென்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், மதுரை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தென் மண்டல அமைப்புச் செயலாளராக நிலையூர் பள்ளி தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். மேலும், கூட்டத்தில் சிபிஎஸ் கொண்டுவருவதை கைவிடக் கோரியும், ஜிபிஎப் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும், புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
அதை உடனடியாக வழங்க கூறுதலும், அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் கம்ப்யூட்டர் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோருதல், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மாவட்ட கல்வி அலுவலர் பதவி வழங்கிட கோருதல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu