அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை: முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பேச்சு

அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை: முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பேச்சு
X
தமிழகத்தில் அதிமுக வாக்குகள் சதவீதம் குறையவில்லை - முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பேச்சு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் சட்டமன்ற தேர்தலில் கணிசமாக அதிமுக வாக்கு சதவீதம் உயர்ந்து இருந்தது.

களத்தில் நின்ற அனைவரை காட்டிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை புறநகர் மேற்கு மண்டல இலக்கிய அணி சார்பில் கலந்தாய்வு கூட்டம்‌ திருமங்கலம் அருகேயுள்ள கல்லுப்பட்டி ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இதற்கு ,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜ் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார், அவர் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். அம்மா இல்லாத சட்டமன்ற தேர்தலை நாம் சந்தித்துள்ளோம். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு 1,43,85,410 மக்கள் வாக்களித்தார்கள். திமுக பெற்ற வாக்குகள் 1,56,85,421 ஆகும். நமக்கும் திமுகவிற்கும் வெறும் 3% வித்தியாசம் என்று கூறப்பட்டுள்ளது.

3% என்பது சில இடங்களில் திமுக கூடுதல் வாக்குகளை பெற்று தான் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 43 தொகுதிகளில் 1,98,500 வாக்குகளைப் பெற்று இருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சி அமர்ந்திருப்போம். நாம் தோற்கவில்லை வெற்றியை நழுவ விட்டு விடுவோம். 1,43,85,421 மக்கள் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.76. சதவீதம் .அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 18 .26 சதவீதம் ஆகும். அதாவது, திமுக பெற்ற வாக்கு 2.23 கோடி. நாம் பெற்ற வாக்கு 1.28 கோடியாகும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காட்டிலும், சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குகள் குறைந்துள்ளது. அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதை புள்ளி விவரம் நமக்கு கூறி உள்ளது. அதேபோல், முதலமைச்சர் வேட்பாளர் களத்தில் எடப்பாடியார், ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் பலர் இருந்தனர் .

இதில், முதலமைச்சர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது, எடப்பாடியார் 90,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், ஸ்டாலினோ, 70,580 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் என்று புள்ளி விவரம் நமக்கு கூறியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆனால், உயர்மட்ட குழுவை அமைத்தார்கள் அதற்கு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் நீங்கள் அனுமதி பெற்றுள்ளார் என்று கேள்வி கேட்டனர். ஆனால், எடப்பாடிபழனிசாமி 7.5சதவீதம் இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தி அதன்மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க செய்தார். தற்போது அரசு, மாணவர்களை ஏமாற்றுகிறது .

இன்றைக்கு இன்றைக்கு ஆட்சியாளர்களின் இயலாமையை திசை திருப்ப ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். முதல்கட்டமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறனர். இவர்கள் செய்யும் செயலால் வலிமையான பாரதத்தில் நாம் தனிமை படுத்தும் நிலைக்கு உருவாக்கப்படுவோமா என்று மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியின்‌ அடக்குமுறை தர்பார்ற்கு அடங்கிப் போகும் இயக்கம் இந்த இயக்கம் அல்ல,

பீகாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிராசாந்த் கிஷோர் பிரச்சாரத்தை மீறி, நாங்கள் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் நாம். நாணயத்தின் இரு பக்கமாக எதிர்க்கட்சி ஆளும் கட்சியும் உள்ளது.நீங்கள் ஆட்சியில் இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சி நாங்கள் ஆளுங்கட்சி இருந்தால் நீங்கள் எதிர்க்கட்சி ஆகும்.

புரட்சித்தலைவர் தொடங்கிய இந்த இயக்கத்தை அளிக்க ஒருவர் அமமுக கட்சி தொடங்கி தம்பி வா என்று அனைவரும் அழைத்தார்.ஆனால், இன்றைக்கு அந்த கட்சி விலாசம் இழந்து போய் உள்ளது. ஆகவே, திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது , மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறி வரும் தேர்தல் காலங்களில் கழகத்திற்கு வெற்றிபெற்றிடும் வண்ணம் இலக்கிய நிர்வாகிகள் இன்று முதல் களப்பணி ஆற்ற வேண்டும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன் ,பால்பாண்டி, லட்சுமி சரவண பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!