மதுரை செல்லூர் மின் மயானத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மதுரை மாநகராட்சி தத்தனேரி மின்மயானத்தில்ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகராட்சி தத்தனேரி மின்மயானத்தில்ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தத்தனேரி மின்மயானம் மற்றும் செல்லூர் வாகன பணிமனையில் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் (14.06.2023) ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தத்தனேரி பகுதியில் மின் மற்றும் எரியூட்டு மயானம் செயல்பட்டு வருகிறது. இம்மயானத்தில், ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகள், பணியாளர்கள் விவரம் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சுற்றுப்புறங்கள் பராமரிப்பு, கண்காணிப்பு
கேமிரா வசதி, வாகனம் நிறுத்தும் வசதி, பூங்கா பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார். தத்தனேரி மயானத்தின் சுற்றுப்புறத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும், வளாக பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்குமாறும், சுழற்சி முறையில் பணியாளர்களை பணியமர்த்தி பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.மேலும், தத்தனேரி மின்மயானம் அருகில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூட மையத்தில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, செல்லூரில் உள்ள மாநகராட்சி வாகன பணிமனையில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கான குப்பை அள்ளும் வாகனங்கள், திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள், டிப்பர் லாரிகள் மண்கூட்டும் வாகனம் உள்ளிட்ட தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்தும், பணிமனையில் உள்ள டீசல் நிலையம், பேட்டரி வாகனங்கள், பதிவேடுகள் ஆன்லைன் மூலம் வாகனங்களை கண்காணிக்கும் ஜி.பி.ஆர்.எஸ். முறை செயல்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பணிமனைக்கு உள்பகுதியில் உள்ள நாய்கள் காப்பகத்தில் ஆய்வு செய்து காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் மருத்துவ பரிசோதனை முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ் மாநகரப் பொறியாளர் அரசு , நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார் உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உதவிப் பொறியாளர்கள் அமர்தீப் ரிச்சார்டு சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu