மதுரை நகரில் திடீர் மழை: சாலையோர வியாபாரிகள் அவதி

மதுரை நகரில் திடீர் மழை: சாலையோர வியாபாரிகள் அவதி
X
மதுரை நகரில் திடீரென பெய்த மழையால், சாலையோர வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏழு நாட்களாக, பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக மழை இல்லாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை அருகே திருவேடகம், சமயநல்லூர் பகுதியில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில், மதுரை நகரில், இன்று பிற்பகல் திடீரென மழை பெய்தது. மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர், கருப்பாயூரணி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திடீர் மழையால், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai in future education