மதுரை பெரியார் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை பெரியார் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள்:  மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.174.56 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.174.56 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்க மேற்கூரை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், நகரப் பேருந்துகள் நிறுத்தப்பகுதிகளும், தரைத் தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் கடைகளுடன் கூடிய வணிக வளாகமும், பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் லிப்ட், எக்ஸலேட்டர், நடைப்பாதை போன்ற வசதிகளும், மேலும் பேருந்து நிலையத்திற்குள் மழைநீர்; தேங்காமல் சீராக வடிந்து செல்வதற்கு மழைநீர்; வடிகால்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர இருப்பதால், பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, நகரப்பொறியாளர் (பொ)சுகந்தி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் த. மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர் ஆறுமுகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!