ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி: ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புகார்

ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி:  ஊராட்சி மன்ற துணைத் தலைவர்  புகார்
X
ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, சௌடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் பெயரில் 10 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

சௌடார்பட்டி ஒன்றியத் தலைவராக ஆண்டிச்சி என்பவர் உள்ளார் . இவருடைய மகன் தங்கப்பாண்டி என்பவர் வலையபட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் மோசடி, கழிவுநீர் குழாய் அமைக்கும் திட்டம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டம் ஆகியவை துவங்கும் முன் பணிகள் முடிந்து விட்டதாக பொய்யான கணக்கு தயார் செய்து, மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் ,பல்வேறு முறைகேடுகளுடன் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதி , மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story