மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்: மண் தரம் பரிசோதனை
மதுரை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடத்தில் நடைபெற்ற மண் பரிசோதனை
மதுரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தில் மண் பரிசோதனை பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் தொடங்கியது மண்பரிசோதனை ஆய்வு.
மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்சேவை அமைய உள்ளது. இதற்காக, தமிழக அரசு சட்டமன்றத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 10 இடங்களில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைய உள்ளது.வருகின்ற 2024-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2027-ல் பணிகள்முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்று வருவாய்த்துறை மூலம் சர்வே பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிக்காக முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் ,அரை கிலோ தூரம் இடைவெளியில் சாலை ஒரத்தில் மண் பரிசோதனையானது தொடங்கிநடைபெற்று வருகிறது.
ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 76 இடங்களில் 30 அடி ஆழத்திற்கு இயந்திரம் மூலமாக மண் பரிசோதனையானது ஆய்வுக்காக எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பணியில், பொறியாளர்கள் அடங்கிய குழுவில் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுப்பட்டுள்ளது. அதை தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 76 இடங்களிலும் பரிசோதனைக்காக மண் எடுக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தேசிய மண் & பகுப்பாய்வக மையத்திற்கு அனுப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.மதுரை மக்களின் நீண்ட கால கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu