மதுரை மீனாட்சி திருக்கல்யாண மொய் வசூல் எவ்வளவு: ஆர்.டி.ஐ. மூலம் தகவல்
பைல் படம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் 26 லட்ச ரூபாய் மொய் வசூல் ஆனதாக ஆர்.டி.ஐ மூலம் .தகவல் தெரியவந்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ம்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்
பின்னர் திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களிடம் கோவில் நிர்வாக சார்பாக மொய் வசூல் செய்யப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்திற்குள் 6 இடங்களில் மொய் வசூல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதுகுறித்து மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேந்திரன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் (ஆர்டிஐ) மொய் விருந்தில் கிடைக்கப்பட்ட வசூல் எவ்வளவு என கேட்டதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 லட்சத்து 80 ஆயிரத்து 350 ரூபாய் திருக்கல்யாண மொய் வசூல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்...
இக்கோயில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான மதுரை மாநகரின் மையப்பகுதியாக கருதப்படுகின்றது. மீனாட்சி அம்மன் கோயில் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள மிக வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவில்களில் ஒன்றாகும், மதுரை தூங்கா நகரம் என்றும் அழைக்கப்படுகிறது இந்த கோவிலின் முக்கிய தெய்வம் மீனாட்சி இக்கோயில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது ஆனால், தற்போதைய அமைப்பு 1623 - 1655 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.
மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 14 நுழைவு கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 45 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை உயரம் கொண்டவையாகும் மற்றும் அவற்றில் மிக உயர்ந்தது தெற்கு கோபுரம் ஆகும். இது 51.9 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 15000 பேர் வருகை தருகின்றனர், இதன் ஆண்டு வருமானம் சுமார் 6 கோடி.மீனாட்சி அம்மன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் பழமையான மற்றும் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மதுரை மாநகரில் அமைந்துள்ள இக்கோயில் புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவத்தை எடுத்து, தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பார்வதியை (மீனாட்சி) மணந்தார் என்று நம்பப்படுகிறது.
வியக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற மீனாட்சி கோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப் பட்டது ஆனால் அதை உலகின் ஏழு அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க முடியவில்லை. இருப்பினும், இந்த இந்தியாவின் கோயில் நிச்சயமாக இந்தியாவின் அதிசயங்களில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும், தினமும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 10 நாட்கள்நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவின் போது, கோவிலுக்குலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும்பலர் வருகை தந்தாலும், இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு, இந்தியாவின் சிறந்த சுத்தமான சின்னம் ஆன இடம் என்று பெயரிடப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu