/* */

மதுரை மீனாட்சி கோயிலில், பெருந்திருவிழா: கொடியேற்றம்!

மதுரை மீனாட்சி கோயிலில், பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

மதுரை மீனாட்சி கோயிலில், பெருந்திருவிழா: கொடியேற்றம்!
X

மதுரை.. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.. இன்று கோலாகல கொடியேற்றம்:

மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.23ம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.20ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.

அன்றிரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஏப்.22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்.23ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதனை தொடர்ந்து, அழகர் கோயில் திருவிழா 19ம் தேதி தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்.22ம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.23ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

Updated On: 12 April 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...