நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசாக இருக்க வேண்டும். ஜி.கே. வாசன்

நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசாக இருக்க வேண்டும். ஜி.கே. வாசன்
X

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்(பைல் படம்)

வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடும் என்றார் ஜி.கே.வாசன்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக திமுக இருக்கக்கூடாது என்றார் தமாகா தலைவர் ஜி கே வாசன்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமாக தலைவர் ஜி.கே.வாசன் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கொடநாடு கொலை வழக்கில் பழிவாங்கும் அரசாக திமுக இருக்கக்கூடாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்படக்கூடிய அரசாகத்திகழ வேண்டும். பொதுவாக கல்வியில் அரசியலை புகுத்தக் கூடாது. அப்படி செய்ததால், ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வேதனையளிக்கிறது.

தமிழக அரசைப் பொருத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில், உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி, எந்தந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அந்த தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையில் இருக்கிறோம். அதிமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளோம். வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் கூட்டணியுடன் பேசி போட்டியிடுவோம் என்றார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா