சென்னை புயல் காரணமாக ,மதுரையில், விமானங்கள் ரத்து!

சென்னை புயல் காரணமாக ,மதுரையில், விமானங்கள் ரத்து!
X

மதுரை விமான நிலையம்.

சென்னை அருகே புயல் காரணமாக ,மதுரையிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக, சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் 6 மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணியளவில் மதுரை வந்தடையும்.

சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் இரண்டு மிக்ஜாம் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால், வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், மதுரையிலிருந்து பகல் 10:20 மணிக்கு மற்றும் 11 40 மணியளவில் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12 30 மணியளவில் வழக்கமாக மதுரை விமான நிலையம் வந்தடையும்.

தற்பொழுது, துபாயிலும் பலத்த மழை பெய்து வருவதால், ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணி அளவில் மதுரை வந்தடையும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!