Madurai District Temples Diwali Crowd தீபாவளி முன்னிட்டு மதுரை மாவட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
மதுரை மாநகர கோயில்களில் தீபாவளியையொட்டி நீண்ட க்யூவில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
பைல் படம்.
Madurai District Temples Diwali Crowd
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிகாலை முதலே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இதே போல் மதுரை மாவட்டத்தில், உள்ள கோவில்களில் காலை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் பலர் இன்றைய தினத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானங்களையும் வழங்குவது வழக்கம். வருடத்திற்கு ஒரு நாள் வரும் இந்த பண்டிகையின் போது பலர் அனாதை ஆசிரமங்கள், மற்றும் முதியோர் இல்லங்களில் ஒரு வேளை உணவு வழங்குவர்.
பலர் வீடு தேடி வருவோருக்கு இனிப்பு காரம் வழங்கி அதனோடு செலவுக்குபணத்தையும் வழங்கி வருவது வழக்கமான நடைமுறையாகும். இதுபோல் மதுரை மாவட்டத்திலும் பலர் இன்று அன்னதானம் வழங்கினர். மேலும்,தீபாவளி முன்னிட்டு, அதிகாலை பக்தர்கள் புது ஆடைகளை அணிந்து கொண்டு கோயில்களில் சுவாமி வழிபட்டனர். பின்னர், வீடுகளுக்கு சென்று நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருமங்கலம் மீனாட்சி சுந்தரே திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்ய விநாயகர், தாசில்தார் சித்தி விநாயகர் ஆலயம், சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயம், கள்ளழகர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீபாவளியையொட்டி பக்தர்கள் இறைவனை வழிபட சென்றதால் கூட்டம் வழக்கத்தினை விட அதிகமாக இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu