மதுரை மாநகரில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் வேதனை
பைல் படம்
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
இதனால், பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.இதில், நகரில் மாடுகள் மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருந்து வருகின்றன.அதிலும் சாலைகளில் சுற்றித் தெரியும் தெரு நாய்களால் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.
குறிப்பாக ஒரு நாளைக்கு ஏராளமானோர் அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக,மதுரை நகரின் மையப் பகுதியான தெப்பக்குளம் காமராஜர் சாலை ,கீழவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், அண்ணாநகர், வண்டியூர், யாகப்பா நகர், கருப்பாயூரணி மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் தெரு நாய் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்களின் குறுக்கே விழுவதால் பலரும் விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நாய்கள் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கியவர் கூறியதாவது, நான் மதுரை முனிசாலை அருகே காமராஜர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ரோட்டின் குறுக்கே ஓடி வந்ததால் நான் விபத்தில் சிக்கினேன். இதனால் எனது கையில் முறிவு ஏற்பட்டது. என்னை போல் பலரும் நாய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெருக்களின் நாய்கள் சிறுவர்கள், பெரியோர்கள் என அனைவரையும் கடித்து குதறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu