மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது

மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 பேர்  கைது
X
மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சம்பவங் களில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

திருப்பரங்குன்றத்தில் குடி போதையில் தாய், மகன் மீது தாக்குதல் வாலிபர் கைது

திருப்பரங்குன்றம்.எஸ்.மேட்டுத்தெருவைச்சேர்ந்தவர் அய்யனார் மகன் பிரசாந்த் 20.இவரும் இவர் அம்மாவும் மேட்டுத்தெருவில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு குடிபோதையில் வந்த சக்கிலியர் மேட்டுத்தெருவைச்சேர்ந்த முருகன் மகன் ஜெகந்நாதன் 31 என்பவர் பிரசாந்தையும் அவர் அம்மாவையும் ஆபாசமாக பேசி தாக்கினார்.இந்த சம்பவம் குறித்து பிரசாந்த் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத்தாக்கிய வாலிபர் ஜெகந்நாதனை கைது செய்தனர்.

பெருங்குடியில் வட மாநில தொழிலாளர்கள் மோதல்:மூன்றுபேர் கைது

ஜார்கண்ட் மாநிலம் கோசாபூரை சேர்ந்தவர் ஹரிஷ்சந்திராநாயக் மகன் தீரா நாயக் 22.இவர் அருப்புக்கோட்டை ரோடு பெருங்குடியில் கட்டப்படும் தனியார் கம்பெனி கட்டிடத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.இதே கம்பெனியில் பீகார் மாநில பிஜெல்பூரைச்சேர்ந்த தேவ நாராயணன் யாதவ் மகன் சிந்து குமார் யாதவ்28,பீகார் ஜாராகியைச்சேர்ந்த மகூர்பஸ்வான் மகன் டோமிபஸ்வான் 25,பீகார் சீரடியைச்சேர்ந்த விஜய்ஜாதவ் மகன் ராஜுவ்குமார் ஜாதவ் ஆகியோரும் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் தீரஷ்நாயக் அளவுக்கு அதிகமான குடிபோதையில் சென்று அவர்கள் தங்கியிருக்கும் அறையின் முன்பாக வாந்தியெடுத்து ரகளை செய்துள்ளார்.இதை கண்டித்த மற்ற தொழிலாளர்களை ஆபாசமாக பேசியுள்ளார்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அவர்கள் மோதிக்கொண்டனர்.இதில், தீரஷ் நாயக் தாக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து இரு தரப்பிலும் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து, சிந்துகுமார்‌ யாதவ்,டோமிபஸ்வான்,ராஜீவ்குமார்ஜாதவ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

பைக்காராவில் ஐ.டி.நிறுவன ஊழியருக்கு வெட்டு:வாலிபர் கைது

மதுரை, பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டுத்தெரு 7வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரபோஸ்மகன் பிரவீன்குமார்27. இவர் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் பைகாரா மேட்டுத்தெருவைச்சேர்ந்த முருகன் மகன் பிரபுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.இந்த நிலையில் பைக்காரா கபிலம்மாள் கோவில் அருகே சென்ற பிரவீன்குமாரை வழிமறித்த பிரபு அவரை ஆபாசமாக பேசி காய்கறிவெட்டும் கத்தியால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வெட்டிய பிரபுவை கைது செய்தனர்.

புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது

மதுரை, மேலூர் முனியாண்டிகோவில் பகுதி, முகம்மதியார் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் ஸான்பிரிட்டோ35.இவர் இதற்கு முன்னதாக கருப்பாயி ஊரணி சீமான் நகரில் வசித்து வந்தார்.அப்போது இவருக்கும் அந்த பகுதியைச்சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த சம்பவத்திற்குப்பிறகு ஜான் பிரிட்டோ மேலூருக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் இறப்பு சடங்கில் கலந்து கொள்ள சீமான்நகர் வந்திருந்தார்.அப்போது அவர் சீமான் நகர் பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது ஏற்கெனவே கொடுத்த போலீஸ் புகாரில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தம்பிதுரை 34,பாரதிபுரம் 6வது தெரு பாண்டி மகன் அக்னீஸ்வரன் 34,ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் ஜான்பிரிட்டோ போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லியுள்ளனர்.

இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த தம்பிதுரையும் அக்னீஸ்வரனும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து, கல்லாலும் இரும்புக் கம்பியாலும் ஜான்பிரிட்டோவை தாக்கினர்.இந்த சம்பவம் குறித்து ஜான்பிரிட்டோ மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரைத் தாக்கிய தம்பிதுரை, அக்னீஸ்வரனை கைது செய்தனர்.

Tags

Next Story