தொடர் மழையால் நிறைந்த கண்மாய்களை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தொடர் மழையால் நிறைந்த கண்மாய்களை  மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

மதுரை மாவட்டத்தில் நிறைந்துள்ள கண்மாய்களை ஆட்சியர் அனிஷ் சேகர் ஆய்வு செய்தார்.

தொடர் மழையால் நிறைந்த கண்மாய்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Madurai District, Kanmais full of continuous rains,Collector inspectedதமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த மழைக்கு மதுரை மாவட்டமும் விதி விலக்கு அல்ல. மதுரை நகரம் மட்டும் இன்றி புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழையினால் ஏரி குளங்கள் மற்றும் கண்மாய்கள் எல்லாம் நிரம்பி காட்சி அளிக்கின்றன.

Madurai District, Kanmais full of continuous rains,Collector inspectedமதுரை மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால் பல கன்மாய்களுக்கு தொடர்ந்து நீர் வளர்த்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே உள்ள வண்டியூர் கண்மாய், கொடிக்குளம் கண்மாய், பரவை கண்மாய், திருமங்கலம் உறப்பனூர் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வாய்க்கால்களின் மூலம் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால், வண்டியூர் கண்மாய் மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை ஆய்வு செய்து தண்ணீரை பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.

Madurai District, Kanmais full of continuous rains,Collector inspectedமதுரை மாவட்டத்தில் தொடர் மழையால், கண்மாய்களுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பாலமேடு சாத்தையாறு அணை, வண்டியூர் கண்மாய்களில் மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் அதிகமாக வெளியேறுகிறது.மதுரை நகரில், மேலமடை தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்புமலர் தெரு, கோமதி புரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளன.

Madurai District, Kanmais full of continuous rains,Collector inspectedமதுரை அருகே சோழவந்தானில் பலத்த மழையால், மாரியம்மன் கோயில் அருகே மழைநீர் பெருகி, கழிவு நீர் கால்வாயும் கலக்கிறது. அத்துடன் சாலைகளில் மழைநீர் தேங்குவதால், பாதசாரிகள் செல்ல இடையூறாக உள்ளது. இதை, சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Madurai District, Kanmais full of continuous rains,Collector inspectedமதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளின் ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மழை நீரால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டு உள்ளார். மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!