மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை

மதுரையில் வீடுகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை
X
தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை

மதுரையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தமிழக அரசு பொதுஇடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்லவும் தடை விதித்தது. சமூக இடைவெளியைக்கடைப்பிடித்து வீட்டிலேயே மக்கள் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசு வேண்டுகோளும் வைத்திருந்தது. அதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அவரவர்கள் இல்லத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அவல் பொரி, வடை, அப்பம், இட்லி, முக்கனிகள், பால், பருப்பு பாயசம் உள்ளிட்ட பொருள்களுடன் படையல் வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .

மேலும், பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால், கோவில் வாசலில் நின்றபடி சுவாமியை வழிபட்டு சென்றனர். சிறிய பிள்ளையார் கோயில்களில், சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபட்டனர். தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!