மதுரை அருகே திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம்: கட்சியிகளிடையே கடும் போட்டி

மதுரை அருகே திருமங்கலத்தில்  தேர்தல் பிரசாரம்: கட்சியிகளிடையே   கடும் போட்டி
X

மதுரை மாவட்டம், திருமங்கலம் மாவட்ட ஊராட்சிக்கு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மநீம வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரம்

இங்கு மும்முனை போட்டி என்பதால் பிரசாரக்களம் கடுமையாகவே உள்ளது

மதுரை மாவட்டம், திருமங்கலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 16-வது வார்டுக்கு, அதிமுக சார்பில் தமிழழகு, திமுக சார்பில் ஜெயராஜ், மக்கள் நீதி மையம் சார்பில் என். முத்துவடிவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளரை, ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அதிமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் தலைமையில், அக்கட்சியினர் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இதேபோல, திமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி இரா. முத்தையா, மாவட்டச் செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும், மக்கள் நீதி மைய வேட்பாளரை ஆதரித்து, மாவட்டச் செயலர் அழகர் ஆலோசனையின் பேரில், அண்ணாநகர் முத்துராமன் தலைமையில், நகரச் செயலாளர் ராமலிங்கம், ஐராவதநல்லூர் கிளைச் செயலாளர் பூமிராஜா ஆகியோர் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்தனர். இங்கு மும்முனை போட்டி என்பதால் பிரசாரக்களம் கடுமையாகவே உள்ளது.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்