அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்

அக். 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்: மதுரை மாவட்ட ஆட்சியர்
X
மதுரை மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக். 2ல் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்ற ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள், வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. எனினும், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில், அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தியான நாளை, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மதுரை மாவட்டத்தில், மனமகழ் மன்றங்கள், மதுபானக் கடைகளுடன் கூடிய பார்களும், அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, சனிக்கிழமையன்று, மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!