மதுரையில் கொத்தனார் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் கொத்தனார் தூக்கிட்டுத் தற்கொலை
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை :போலீஸார் விசாரணை

மதுரை, பழங்காநத்தம், பசும்பொன் நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் பிச்சை மகன் முகமது ரஹீம் 38 .இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு புது பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்கை ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று பதிவு செய்ய மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த முகமது ரஹீம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜீனத்சுபேரியாபேகம் இந்த சம்பவம் குறித்து மனைவி காசிம் 29 சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ரஹீமின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் மரணம்

மதுரை, செல்லூர் ஹரிகிருஷ்ணா நகர் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் காலமேகப் பெருமாள் 25 .இவரும் இவரது தந்தை கருப்பையாவும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.இவர்கள் விளாங்குடியைச்சேர்ந்த கட்டிட காண்அடிராக்டரர் சதீஷ் பாண்டியனிடம் சப் காண்டிராக்டராக வேலை செய்து வந்தனர் .

இவர்கள், ஆண்டாள்புரம் ஏ.ஆர். தோப்பில் உள்ள சத்துணவு கட்டிடத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், தந்தையும் மகனும் 10 அடி உயரத்தில் சாரம் அமைத்து அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மகன் காலமேகப்பெருமாள் சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரை தாங்கி பிடிப்பதற்காக தந்தை முயற்சிசெய்தார். அவரால் முடியாமல் அவரும் சேர்ந்து கீழே விழுந்தார் .

இதில் இரண்டு பேருக்கும் பலமாக அடிபட்டது. இருவரையும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகன் காலமேகப் பெருமாள் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தந்தை கருப்பையா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொத்தனார் காலமேகப்பெருமாளின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் பாம்பு கடித்து பொம்மை வியாபாரி மரணம்

மதுரை, திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சேகர் 48. இவர் திருப்பரங் குன்றத்தில் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார் .இவர் இரவில் வீட்டில் இருந்து வெளியே பாத்ரும் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்து விட்டது .எந்த நிலையில் தன்னை பாம்பு கடித்து விட்ட செய்தியை மனைவியிடம் தெரிவித்தார்.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரால் பேச முடியாமல் மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் .இந்த சம்பவம் குறித்து மனைவி பாலாமணி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவிக்கு கத்திக்குத்து

மதுரை, ஆணையர் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ராதாரவி 37 .இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பதற்கு கணவர் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கணவர் ராதாரவி காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மனைவி சரஸ்வதியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து மனைவி சரஸ்வதி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், கணவர் ராதாரவி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்..

ஆட்டோவை சேதப்படுத்திய மூன்று பேர் கைது.

மதுரை ,செல்லூர் அருள்தாஸ்புரம் பாக்கியநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலன் மகன் சரவணக்குமார் 30 .இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் அந்த பகுதியில் ரகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி சரவணகுமார் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று வாலிபர்களும் சரவணகுமாரையும் அவரது நண்பரையும் ஆபாசமாக பேசி அவர்களை தாக்கியும் ஆட்டோ கண்ணாடியையயும் உடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணகுமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தாக்கி ஆட்டோ கண்ணாடியை உடைத்த செல்லூர் முனியாண்டி கோவில் தெரு மகாலிங்கம் மகன் பாலசுப்பிரமணியன் என்ற கொப்பரை 30, நரிமேடு தாமஸ் தெரு மணி மகன் விஜய் என்ற ஆட்டு விஜய் 27, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் 22 ஆகிய மூன்றுபேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story