தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
பைல் படம்
தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
தெற்குவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்.இவர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தெற்கு வாசல் என்.எம்.ஆர். பாலம் பிள்ளையார் பாளையம் ரோட்டில் சென்றார்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக ஒரு இடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிய வந்தது. அங்கு அவர் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது அங்கு 16 ஆயிரத்து 920 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதிக்கி வைக்கப்பட்டிருந்தன .அவற்றில் கூல் லிப் 5670 கிலோவும் கணேஷ் புகையிலை 11 ஆயிரத்து 250 கிலோவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தார் .விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூபாய் 17ஆயிரத்து 200ஐயும் போலீசார் இது குறித்து விற்பனை செய்த பறிமுதல் செய்தனர். அழற்றை பதுக்கி வைத்திருந்த சிம்மக்கல் தளவாய் தெரு அசோக்குமார் ஜெயின் 52 என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தும் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது .
பணம் வைத்த சூதாடிய 10 பேர் கைது ரூ.17,000 பறிமுதல்.
மதுரை திருநகர் காவல் உதவி ஆய்வாளர் குமாரி தலைமையில் போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். திருநகர் கல்லறை தோட்டம் அருகே சென்றபோது அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார் .
பிடிபட்ட நப உள்ளர்களிடம் விசாரித்த போது விளாச்சேரி பசும்பொன் தெரு ஜெயப்பிரகாஷ் மகன் மணிமாறன் 29 ,பசுமலை கோபாலபுரம் பால்பாண்டி 42, திருநகர் நேதாஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பாலமுருகன் 42 ,மதுரை நேதாஜி தெரு ஜெகநாதன் 46 என்று தெரிய வந்தது அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் பணம் வைத்து விளையாடிய சீட்டு கட்டுகளையும் பணம் ரூ 400ஐயும் பறிமுதல் செய்தார்.
எஸ் எஸ் காலனியில் சூதாட்டம் ஆறு பேர் கைது
எஸ் எஸ் காலனி போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் திலீபன். இவர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர்கள் எஸ் எஸ் காலனி கம்பர் தெருவில் காட்டேஜ் ஒன்றில் கும்பலொன்று பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். பிடிபட்ட நபர்களிடம் விசாரித்தார் .விசாரணையில் எல்லீஸ் நகர் நேரு நகர் ஞானசேகரன் 50 ,எப. எப். ரோடு ராஜா தெரு சிலம்பரசன் 37, தனக்கன்குளம் நேதாஜி நகர் முத்துப்பாண்டி 42, திரவியம் மகன் ஜார்ஜ் 25 ,நியூ எல்லீஸ் நகர் கணபதி நகர் செல்லப்பாண்டி 39, அச்சம்பத்து பஜனை மடத்தெரு ரங்கநாதன் 32 என்று தெரியவந்தது. அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர் .அவர்கள் விளையாடிய சீட்டுக்கட்டுகளையும் பணம் ரூபாய் 17,000 ஐயும் பறிமுதல் செய்தனர்.
குடும்ப பிரச்னையால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை ஐராவதநல்லூர் மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் 35 . இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி மகன் ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சரவணன் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி முருகேஸ்வரி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை தாக்கிய மூன்று பேர் கைது.
மதுரை சிந்தாமணி கஜேந்திரபுரம் கணேசன் மகன் கௌதம் 27 .இவர் சிந்தாமணி மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச்சென்றார். அப்போது அதற்கான டோக்கன் வாங்கினார். அங்கு காமராஜர்புரம் வாழைத்தோப்பு பால்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் 20 என்ற வாலிபரும் கடைக்கு சென்றார். அவர்மீது கௌதமின் கால் எதிர்பாராத விதமாக மித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டியும் அவருடன் சேர்ந்து மேலும் மூன்று பேரும் ஆபாசமாக பேசி அவரை சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கௌதம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜர்புரம் வாழைத்தோப்புவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டி 20, சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு மணிகண்டன் 42, சின்ன அனுப்பானடி மேட்டுப்புஞ்சை தெரு மாயாண்டி 67 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu