மதுரை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

மதுரை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர்  உயிரிழப்பு
X
மதுரையில் நடந்த சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது, பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர் ,இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அருகில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்ட பாலமுருகன் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே, இறந்துவிட்டதாக கூறினர்.

மின் மோட்டரில், மின்சாரம் பாய்ந்து அதனால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரு. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இந்த உயிர்பலிக்கு காரணம் என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.

மதுரை அருகே தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு:போலீசார் விசாரணை:

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் இவரது மனைவி சியாமளா. ரங்கராஜன் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரி ஆவார். இத்தம்பதினருக்கு உதய் (28) என்ற ஒரே மகன் உள்ளார். உதய் விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் மேலாளராக இருந்து வருகிறார்.

நேற்று இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தனது நண்பர்களுடன் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் மொட்டை மாடியில் உதய் காணவில்லை அவரது செல்போன் மட்டும் இருந்துள்ளது. இதனை த்

தொடர்ந்து,அவரது நண்பர்கள் பல இடங்களில் உதய்யை தேடி பார்த்துள்ளனர். மேலும்., உதய் வேலை செய்யும் இடம், வழக்கம் போல் செல்லும் இடங்களுக்கு சென்று பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் வீட்டில் இருந்தவர்கள் சோகத்தில் இருந்து உள்ளனர்.

இன்று மதியம் 3 மணியளவில் அவரது வீட்டில் வாடிக்கைக்கு குடியிருக்கும் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி காய வைப்பதற்கு சென்று பார்த்த பொழுது யாரோ ஒருவர் ரத்த வெள்ளத்தில் அருகில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு (திருவாரூர் டி.எஸ்.பி) வீட்டில் இறந்து கிடப்பதாக கூறவே., உதய்யின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் சென்று பார்த்த பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது உதய் என்பதை அறிந்து அவரது பெற்றோர்கள் துடிதுடித்து போயினர். உடனடியாக திருநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனார்.

தகவலின் பேரில்ல், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த உதயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் ஆக இருந்த உதய் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாரா.? அல்லது தற்கொலை ஏதும் செய்து கொண்டாரா..? என்பது குறித்து திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!