மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில். மூன்று பேர் தற்கொலை
பைல் படம்
ஆரப்பாளையத்தில் ஏழு வயதுள்ள இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு வலைவீச்சு
மதுரை, ஆரப்பாளையம் காளியம்மன் கோவில் தெரு வாய்க்கால் கரை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முத்துக்குமார் 38. இவர் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு 7 வயது உள்ள இரண்டு சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளார் .அங்கு தனியாக வைத்து அவர்களுக்குக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இந்த சம்பவம் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்:பூக்கடைக்காரருக்கு வலைவீச்சு
மதுரை நாயுடு தெருவை சேர்ந்தவர் சேசையா மகன் ஆனந்த் 48.இவர் ,வடம் போக்கி தெருவில் பூக்கடை நடத்தி வருகிறார். .இவர், கல்லூரி மாணவிஒருவரை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி உள்ளார். தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி அடிக்கடி மிரட்டி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.இதனால், மணமடைந்த கல்லூரி மாணவி தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பூக்கடை உரிமையாளர் ஆனந்தை தேடி வருகின்றனர்.
வெவ்வேறு சம்பவங்களில். மூன்று பேர் தற்கொலை
மதுரையில் வைத்தியநாதபுரம் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிச்சை மகன் இன்பக்கொடி 37. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மன வருத்தத்தில்இருந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி செல்வராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்பக் கொடியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் நடந்து சென்ற முதியவர் தவறி விழுந்து மரணம்
மதுரை,பொன்மேனி ரோடு நேதாஜி தெருவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் 70. இவர் காளிமுத்து நகர் பொன்மேனி மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றவர் கீழே விழுந்தார். இதில், பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மகன் கணபதி ராஜா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் சிவராமகிருஷ்ணனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலவாசலில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாஜகான் 56. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது . மகள் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி ஆயிஷா மரியம் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் முகவரி கேட்பது போல் நடித்து பணம் பறிப்பு
மதுரை வளர்நகர் மெயின் ரோடு ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து 42 .இவர் அண்ணா நகர் பகுதியில் நடந்த சென்றார். அப்போது அவரிடம் முகமது முகவரி கேட்பது போல் நடித்து ஒருவர் முகவரி கேட்டார். அவர் முகவரி சொல்லத் தொடங்கிய போது அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ 5400ஐ பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து , அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் பணம் பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
மதுரையில் செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனிவேல் மகன் பூபதி ராகவேந்திரன் 20 .இவர் வழிப்பறி உள்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால், இவருடைய குற்ற செயல்களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின்பேரில், போலீசார் பூபதி ராகவேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் பார்த்தசாரதி 21. இவர் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து இவர் இந்தச்செயலில் ஈடுபட்டு வந்ததால், இவரையும் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
பி டி ஆர் மெயின் ரோடு இந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் என்ற குட்டீஸ். இவர் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் .இவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் .மதுரையில் ஒரே நாளில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu