மதுரையில் டாக்டர் வீட்டில் நகை திருடியவர் கைது

மதுரையில் டாக்டர் வீட்டில் நகை திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் ஜெயராமன்

வீட்டின் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ஓட்டுநர் ஜெயராமன் நகைகளை திருடியது தெரியவந்தது

மதுரை.மதுரையில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில், 167 கிராம் (32) சவரன் நகை திருடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் நாராயணன்.இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நாராயணன் பீரோவில் வைத்திருந்த 32 பவுன் மதிப்புடைய தங்க பொருட்களை திருடு போயுள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டின் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ஓட்டுநர் ஜெயராமன் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நாரயணன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ்.காலனி காவல் துறையினர், ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business