மதுரையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

மதுரையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட  இளைஞர் கைது
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

மதுரை, விராட்டிபத்து நாடார் முதல் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் முருகன் 39. இவர், பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்து அவரை கத்தியை காட்டி மிரட்டினர்.

அவரிடமிருந்து ரூ தொள்ளாயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, முருகன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அச்சம்பத்து ஞானம் நகர் பொன்னுச்சாமி மகன் கண்ணதாசன் 36. பிரித்தானியாபுரம் ஆசை தம்பி தெரு, ராமதாஸ் மகன் ஜெயந்த் என்ற ஜெயச்சந்திரன் 35. ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.

திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அழகுராஜ் 30 .அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது . திருமணமும் ஆகவில்லை. இதனால், மன உளச்சலில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய அம்மா செல்லபாப்பு கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்பதிவு செய்து வாலிபர் அழகுராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரத்திற்கு வேன் வாங்கி தர மறுப்பு: காய்கறி வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை, சுப்பிரமணியபுரம் முதலாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் 25 .இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மேலும் வியாபாரத்தை வேன் வாங்கி விற்பனை செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவர் தாயாரிடம் வேன் வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் மணமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய அம்மா விஜயா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காய்கறி வியாபாரி ராஜ்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகரில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

மதுரை அண்ணா நகர் யாகப்பா நகர் பாலாஜி நகர் முதல் தெருவைசேர்ந்தவர் லிங்கேஸ்வரன் 47 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது சாவு குறித்து மகன் ராமச்சந்திர பூபதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லிங்கேஸ்வரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்பேட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை:ஒருவர் கைது

மதுரை, நெல்பேட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக விளக்குத்தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கீழவெளி வீதி நாகூர் தோப்புவைச் சேர்ந்த அப்துல் காதர் 5 6. என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு நம்பர்களையும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

பொன்மேனி பஸ் ஸ்டாப்பில் பைக் மோதி மூதாட்டி பலி

மதுரை, பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜம் 72. இவர் பைபாஸ் ரோடு பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆஸ்கர் ஜார்ஜ் மகன் ரிங்கல்டோபேகான்பெல் 25.இவர் பொன்மேனி பஸ்ஸ்டாப் அருகே பைக் ஓட்டிச்சென்றார்.அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக நடந்து சென்ற மூதாட்டிமீது மோதி விபத்தானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்துகுறித்து மூதாட்டியின் மகன் சரவணன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி பங்கஜம் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேர் கைது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே டிபி ரோடு சிட்டாலாட்சி நகரை சேர்ந்தவர் படித்துறை மனைவி ஆர்த்தி 33. இவர் பெரியார் பேருந்து நிலைய பாலம் அருகே கஞ்சா விறபணை செய்தபோது எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தியை பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.

தெப்பக்குளம் பகுதியில் வாலிபர் கைது

அனுப்பானடி தெய்வக்கன்னிதெருவைச்சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் வினோத் என்ற வின்னிவினோத் 21.இவர் தெப்பக்குளம் கேட்லாக் ரோடு சின்ன கண்மாய் அருகே கஞ்சாவிற்பனை செய்தார்.அவரை தெப்பக்குளம் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் பிடித்து அவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். மதுரையில் எஸ் எஸ் காலனி மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட மொத்தம் இரண்டுபேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!