மதுரை அண்ணாநகரில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை..! (மதுரை கிரைம் செய்திகள்)
மதுரை கிரைம் செய்திகளுக்கான மாதிரி படம்.
மதுரை:
மதுரை அண்ணா நகரில் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள், பணம் ரூபாய் 62,000 ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணாநகர் நியூ எச்.ஐ.சி. காலனி 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கல்பனா (41). இவர்கள், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் பொருள்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த முப்பது பவுன் தங்க நகைகள் ,இரண்டு கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூபாய் 62 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து, கல்பனா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ,அவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கார் விற்பனையில் பங்குதாரராக சேர்த்து ரூ.15 லட்சம் மோசடி : கணவன் மனைவியிடம் போலீஸ் விசாரணை
கார் விற்பனையில் பங்குதாரராக சேர்த்து ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் இரண்டாவது தெரு, தென்றல் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் 55. இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பிடி ராஜன் ரோட்டை சேர்ந்த கணவன் மனைவிகளான முத்துக்கருப்பன் 55 ,மீனா 50. இவர்கள் கார்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த வியாபாரத்தில் பங்குதாரராக சேரும்படி முத்துக்குமரனிடம் கூறியுள்ளனர். இதனால் முத்துக்குமரன் ரூபாய் 18 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின்னர் முதலீடு லாபத்தில் பங்கு தரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். இதில் 3 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.மீதமுள்ள தொகைரூ.15லட்சத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளனர். இது குறித்து முத்துக்குமரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் செல்போன் திருட்டு: ஒருவர் கைது.
மதுரை மாவட்டம் பேரையூர் பொன்னையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் 47. இவரது உறவினர் பிரசவவார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் அவர்களை பார்ப்பதற்காக முருகன் சென்றிருந்தார். பார்வையாளர் பகுதியில் இவர் இருந்தபோது இவருடைய செல்போனை ஒருவர் திருடமுயன்றார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் செல்லூர் திருவாப்புடையார் கோவில் தெரு ராஜேஷ் குமார் 40 என்று தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக பூக்கடை உரிமையாளர்கள் மோதல் : நான்கு பேர் கைது .
திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக பூக்கடை உரிமையாளர்கள் மோதிக்கொண்டது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் கீழத்தெரு பழனிவேல் மனைவி புஷ்பவல்லி 28. இவர் கோயில் முன்பாக பூ வியாபாரம் செய்து வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனி குமார் மகன் மகன் மதன்30. இவரும் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வதில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் மதன் அவருடைய அம்மா செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்பவல்லியை ஆபாசமாக பேசி தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து புஷ்பவள்ளி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மதனையும் அவருடைய மாமா ராஜா பாண்டியையும் கைது செய்தனர்.
இந்த மோதல் தொடர்பாக ராஜபாண்டி கொடுத்த புகாரில் போலீசார் புஷ்பவல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சரவணன் ,கணேசன் இருவரையும் கைது செய்தனர். இந்த மோதலில் மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu