மதுரையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பு
ஜீவா நகரில் வாலிபரிடம் செல்போன் பணம் பறிப்பு: பைக்கில் வந்த மூன்று பேர் கைவரிசை
மதுரை சத்யசாய் நகர் குறிஞ்சி தெரு காலங்கரையை சேர்ந்தவர் பிச்சைக்கனி மகன் சின்னமணி 29 .இவர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மீனாம்பிகை நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார் .அப்போது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் அவரிடம் இருந்த செல்போன் ஒன்றையும் பணம் ரூபாய் இரண்டாயிரத்தையும் வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து சின்னமணி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பணம் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பபில் கத்தி முனையில் வழிப்பறி: சிறுவன் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்.கே. புரம் முத்து தேவர் தெருவை சேர்ந்த ராஜா முகமது மகன் பைசல்பாபா 28. இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஈ.பி. ஆபீஸ் எதிரே சென்றுகொண்டிருந்தார். அப்போது தென்றல் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினார். அவரிடம் இருந்து ரூபாய் 200ஐ வழிப்பறி செய்து விட்டு ஓடிவிட்டார் .இந்த சம்பவம் குறித்து பைசல்பாபா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறிசெய்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
பைபாஸ் ரோட்டில் முதியவரிடம் செல் திருட்டு: வட மாநில வாலிபர் கைது
மதுரை எஸ் எஸ் காலனி காளிமுத்து நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி 68. இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் செல் நிறுவனத்திற்கு சென்றிருந்தார்.அப்போது மூன்று பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அப்போது அவர்களில் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை அங்கிருந்தவர்கள் விரட்டி பிடித்தனர்.பின்னர் பிடிபட்ட வாலிபரை எஸ் எஸ் காலனி போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்த போது ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் ஊரைச் சேர்ந்த புதன் நோனியா மகன் சுறா சுராஜ்குமார் 21 என்று தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: வாகனங்கள் வீடுகள் சேதம்
மதுரை ஒத்தக்கடை அருகே மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் நேற்று இரவு கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சியும் தடந்தது. இந்நிகழ்ச்சி நடைபெற்று கொண்பிருந்த போது ஆடல் பாடல் நிகழ்ச்சியை ஒரு தரப்பினர் மறைத்து நின்றதாக கூறப்படுகிறது.மற்றொரு தரப்பினர் அவர்களை விலகி நிற்குமாறு கூறியுள்ளனர்.
இரு தரப்பினரிடையை வாக்குவாதம் நடந்தது .இதனால் ஆத்திரமடைந்த ஒருதரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது தாக்கினர்.இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் திரண்டனர்.அவர்களுக்குள் மோதல் ஏற்ப்பட்டது .பின்னர் குறிப்புட்ட தெருக்குள் புகுந்த ஒரு தரப்பினர் 40-க்கும் மேற்பட்டோர் 2 சக்கர வாகனங்கள், வீடுகள், கார்களை அடித்து சூறையாடினர்.அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன.
இந்தமோதலில் மணிமுத்து ,குமார் உள்பட நான்கு பேர் மீது அரிவாள் வெட்டுவிழுந்தது. இதில் கவலைக்கிடமாக மணிமுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்அந்தப்குதியில் இருந்த கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டன .இதனால் அங்கு பதட்டம் நிறைவு வருகிறது.இந்த சம்பவத்தைதொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu