சாலை நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: போலீஸார் விசாரணை

சாலை நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்

மதுரை அண்ணா நகர் கண் மருத்துவமனை அருகே பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்து வருபவர் கார்த்தி கண்ணன் மனைவி சந்தியா(40 ). இவர் அண்ணா நகரில் உள்ள கண் மருத்துவமனை வெளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர் .இந்த செயின் பறிப்பு குறித்து சந்தியா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

யானைக்கல் புது பாலத்தில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: வாலிபர் கைது

மதுரை திருப்பரங்குன்றம் படப்பாடி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் செந்தில்குமார்(28.) இவர் சித்திரை திருவிழா காண வந்திருந்தார். மதுரை யானைக்கல் புது பாலம் அருகே சென்றபோது இவரை வழிமறித்த வாலிபர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டார் .இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த வாலிபர் ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் ராஜா மகன் மணிகண்டன்(19 )என்பவரை கைது செய்தனர்.

ஆயுதப்படை வளாகத்தில் நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து மரணம்

மதுரை மேல பொன்னகரம் நான்காவது தெரு கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்தவர் சங்கரன்(57.), இவர்மதுரை அடிஷனல் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அழகரை தரிசிக்க சென்று விட்டு நகர் ஆயுதப்படை வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அவர் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி கோமதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற ஊழியர் சங்கரனின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேச்சியம்மன் படித்துறை வைகை தென்கரையில் ஆயுதங்களுடன் மூன்று வாலிபர்கள் கைது

மதுரை திலகர் திடல் உதவி ஆய்வாளர் பரமசிவன். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பேச்சியம்மன் படித்துறை வைகை தென்கரை வழியாக அவர் சென்றபோது மூன்று வாலிபர்கள் போலீசை கண்டதும் போலீஸில் இருந்து பதுங்கினர். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார் .பிடிபட்டவர்களிடம் சோதனை செய்த போது அவர்களிடம் வாள் ஒன்று இருந்தது.அந்த வாளை பறிமுதல் செய்தார்.பின்னர் அவர்கள் யார் என்று விசாரித்தார். அவர்கள் கீழக்குயில்குடி கிழக்கு தெரு பாண்டி மகன் நிஷாந்த்(19,) அச்சம்பத்து வ.உ.சி.தெரு கொழுஞ்சிமகன் கோபிநாத்(30,)அச்சம்பத்து ஏர்குடி ரவிச்சந்திரன் மகன் பிரபாகர்(26 ) என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் அவர் கைது செய்தார்.

ராஜாஜி பார்க் அருகே கத்தியை காட்டி வழிப்பறி: சிறுவன் உள்பட நான்கு பேர் கைது.

மதுரை மே 9 முடக்கத்தான் தேவேந்திரன் நகர் சின்னான்( 53.). இவர் ராஜாஜி பார்க் அருகே நடந்து சென்றார் .அப்போது நான்கு வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டனர் .இந்த வழிப்பறி குறித்து சின்னான் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் தெரிந்தது .பீ.பி.குளம் முல்லை நகர் செல்வம் மகன் சுபாஷ் 20, ஆத்திகுளம் அங்கையார் கன்னி காலனி ராமராஜ் மகன் சுந்தரேஸ்வரன்(22 ),மீனாம்பாள்புரம் பாரதிதாசன் தெரு முருகன் மகன் சந்தோஷ்(19,) மற்றும் 16 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மத்திய சிறை கைதி மரணம் : போலீஸ் விசாரணை

மதுரை ஆழ்வார்புரம் புளியந்தோப்புவை சேர்ந்தவர் பொன்னுபாண்டி மகன் கார்த்திக்(28.) இவர் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர் .ஆனால் குணமடையவில்லை. மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கைதி கார்த்திக்கின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் மரணம்

சிவகங்கை மாவட்டம் பாகனேரியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சரவண மணி(48.) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.குடியை மறக்க சக்கிமங்கலத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று சிகிச்சை மைய பாத்ரூமிற்கு சென்றபோது வழிக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சரவணமணி உயிரிழந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவண மணியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பாயி ஊரணியில் மீன் குத்தகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

மதுரை ஆண்டார்கொட்டாரம் எல். பூலாங்குளம் காளியம்மன் கோவில் தேர்வை சேர்ந்தவர் அக்கினி ராஜ்( 57.). இவர் கண்மாம்களில் மீன் குத்தகை எடுத்து விற்பனை செய்து வந்தார். இதனால் அவருக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டது. கடனை அடைக்க முடியாமல் திணறி வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தவர் வரிச்சியூர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தந்தை சின்னசாமி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மீன் குத்தகை வியாபாரி அக்னிராஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story