மதுரை அருகே பெண் மீது தாக்குதல் இருவர் கைது

மதுரை அருகே பெண் மீது தாக்குதல் இருவர் கைது
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

திடீர் நகரில் முன்விராதத்தில் பெண் மீது தாக்குதல் பெண் உள்பட இரண்டு பேர் கைது:

மதுரை திடீர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி லீலா(40.) அதேபகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(42.) இவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பண பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில்,திடீர் நகர் கருமாரியம்மன் கோயில் அருகே சென்ற லீலாவை வழிமறித்து பாண்டியம்மாள்(42,) வாசுதேவன் மகன் முத்துப்பாண்டி 26, மற்றும் திவ்யா( 34 ) மூவரும் சேர்ந்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து லீலா திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். மூன்று பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய பாண்டியம்மாள்(42,) முத்துப்பாண்டி( 26 ) இருவரையும் கைது செய்தனர்.

வில்லாபுரத்தில் இளம் பெண் தற்கொலை:போலீஸ் விசாரணை:

மதுரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்துல்முதலீப் மனைவி ரூபினா( 27.) இவர்களுக்கு 2017 ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது .திருமணத்திலிருந்து கணவர் குடும்பத்தார்,கூடுதல் வரதட்சணை கேட்டு, ரூபினாவை கொடுமைப்படுத்தியுள்ளனராம். இதனால், மன அழுத்தத்தில் இருந்த ரூபினா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, ரூபினாவின் அம்மா விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டியை சேர்ந்த சிக்கந்தர் அம்மாள்( 55 )அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபினாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண் உள்பட 3 பேர் தற்கொலை:

மதுரை, வண்டியூர் மம்பட்டி பட்டறை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் மகன் விக்ரம்23.இவர், ஆட்டோ ஓட்டிவந்தார். இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து மனைவி ஐஸ்வர்யா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விக்ரமின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகர் தனியார் மருத்துவமனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபணவூரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பழனிவேல் (36.). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் மருத்துவமனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி வனிதா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை:

மதுரை,செல்லூர் சுயராஜ்யபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி மனைவி நல்லமணி(36.) இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்ல மணியின் அம்மா உசிலம்பட்டியை சேர்ந்த அங்கம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் நல்லமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரிமேட்டில் கத்தியை காட்டி முதியவருக்கு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது :

மதுரை, நரிமேடு பி.டி .ராஜன் ரோட்டை சேர்ந்தவர் காஜா முஹைதீன்(60.). மதுரை பனையூர் மேல தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன்( 40 ). இவரும் பெருங்குடி வலையபட்டி மேல தோப்புவைச் சேர்ந்த மோசஸ் ராஜேந்திரன்(48 ) என்பவரும் சேர்ந்து முதியவர் காஜா மைதீனை ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, காஜாமைதீன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, முதியவரை மிரட்டிய முத்துக்கருப்பன், மோசஸ் ராஜேந்திரன் இருவரையும் கைது செய்தனர்.

பொறியாளர் நகரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி:அண்ணன் தம்பி கைது :

மதுரை பொறியாளர் நகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் கௌரி (62.). இவருடைய கணவர் சோமசுந்தரம் மதுரை உயர்நீதி கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்ற கௌரியை வழிமறித்து, இரண்டு வாலிபர்கள் செயின் பறிக்க முயன்றனர்.அப்போது கூச்சல் போட்டபடி, கௌரி அவர்களிடம் போராடி உள்ளார். இவர் கூச்சலிட்ட சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த போராட்டத்தில் கௌரிக்கு கண் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கணவர் வழக்கறிஞர் சோமசுந்தரம் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரிடம் செயின் பறிக்க முயன்ற அண்ணன் தம்பிகளான திண்டுக்கல் மாவட்டம், நத்தம் லிங்கவாடி நடுத்தெருவை சேர்ந்த அரசப்பன் மகன் அரசு ரஞ்சித் ( 31,) அவருடைய சகோதரர் சின்னஅடைக்கன்(30 ) இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!