மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்
X

ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு நம்பர் 42 ல் தூய்மை குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர், அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலை பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அவன்யூ பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் நேரடியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணியானது நடைபெற்றது.

மேலும், டெங்கு ஒழிப்பு நெகிழி பை தவிர்ப்பது குறித்தும், இதற்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியம், மதுரை மாநகராட்சியில் நகர்நல அலுவலர், மருத்துவர் மற்றும் 42 வது வார்டு சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு இப்பணியை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!