மதுரை அருகே, கூட்டுறவு வங்கி சுவர் இடிந்து காவலாளி பலத்த காயம்

மதுரை அருகே, கூட்டுறவு வங்கி சுவர் இடிந்து காவலாளி பலத்த காயம்
X

சேதமடைந்த சுவர்.

திருமங்கலம் அருகே வங்கி வாயில் மேற்புற தாழ்வாரச்சுவர் திடீரென சரிந்து விழுந்ததில் வங்கி காவலாளி பலத்த காயமடைந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை வங்கி நுழைவு வாயிலில் உள்ள மேற்புற தாழ்வரச் சுவர் முழுவதுமாக திடீரென சரிந்து விழுந்தது. இதில், வங்கி காவலாளி ராமசந்திரன் (72) - க்கு காயம் ஏற்பட்டது. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் கட்டிடம் மிகப்பழம யான கட்டிடம் என்பதாலும், இருதினங்களாக பெய்த மழையினாலும் தாழ்வாரச் சுவர் முழுவதும் ஈரப்பதம் ஏற்பட்டு வலுவிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இன்று வங்கி வேலைநாள் என்பதால், வாயில் முன்பு சரிந்த தாழ்வார சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!