அண்ணன் தம்பி வீடு உள்பட 3 வீட்டில் அடுத்தடுத்து திருட்டு

அண்ணன் தம்பி வீடு உள்பட 3 வீட்டில் அடுத்தடுத்து திருட்டு
X

பைல் படம்

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு .செய்து விசாரிக்கின்றனர்

மதுரை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

மதுரை அருகே, சிலைமான் பகுதியில் அண்ணன் தம்பிவீடு உள்பட அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 27 பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் திருடிச்சென்ற அசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை அருகே கல்மேடு, பசும்பொன் நகர், குருநாதன் மனைவி நிர்மலா தேவி 42. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தார்..பின்னர், அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டில் பீரோவில் வைத்திருந்த நான்கு பவுன் தங்க நகைகள் ரூபாய் ஐயாயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, நிர்மலாதேவி, சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து ,கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

அண்ணன் தம்பி வீட்டை உடைத்து 23பவுன் 6லட்சத்து 45ஆயிரம் கொள்ளை

மதுரை அருகே பூந்தோட்ட நகர் சந்திரலேகா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தர்மராஜ் 43.இவரும் இவர் சகோதரும் அடுத்தடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காற்றுக்காக கதவை பூட்டாமல் சாத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை பார்த்த போது இவர்கள் இருவர் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையன் அண்ணன் வைத்திருந்த 16 1/2பவுன் தங்க நகைகள் ரூபாய் நான்கு லட்சத்து இருபது ஆயிரமும் அவரது சகோதரர் வீட்டில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகளும் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் பணமும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அண்ணன் தம்பிகள் வீட்டில் மொத்தம் 23பவுன் தங்கநகைகளும் ரூ 6லட்சத்து 45ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொள்ளை குறித்து, அவர்கள் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அடுத்தடுத்த கொள்ளையடித்துச் சென்ற கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

பெருங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட எலெக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை அருகே பெரிய ஆலங்குளம் கார்த்திகை தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சரவணன் 28 .இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமாகிறது. இவர் எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார் .இவர் மூலநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி மல்லிகா பெருங்குடி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story