மதுரை அருகே கத்திமுனையில் வழிப்பறி: 4 பேர் கைது

மதுரை அருகே கத்திமுனையில் வழிப்பறி: 4 பேர் கைது
X
மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கத்தி முனையில் வழிப்பறி செய்த நான்கு பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வகுமார் 34 .இவர்ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒயின்ஷாப் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர்.அவர்கள் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ 1500ஐ வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேல பொன்னகரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் 20 ,அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி 23, முத்துக்குமார் மகன் கோபிநாதன் 21, பாண்டி மகன் மணிகண்டன் 23 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

அண்ணா பஸ் ஸ்டாண்டில்கத்திய முனையில் வழிப்பறி: வாலிபர் கைது

மதுரை.மே 19 அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 50. இவர் அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பாக நின்று கொண்டிருந்தார் .அப்போது இஸ்மாயில் புரம் பத்தாவது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் 30 என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூபாய் 200ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

கேலி செய்ததைத்தட்டி மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது‌

மதுரை, அவனியாபுரம் செம்பூரணி ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ஆறுமுகம்60. இவர் வீடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பரைக்கனி மகன் ரஞ்சித் என்ற பாறை மண்டையன் 23 என்ற வாலிபர் நின்றுகொண்டிருந்தார்.அவர் அந்த சென்றவர்களை கேலி செய்து கொண்டிருந்தார் .இதை மூதாட்டி ஆறுமுகம் தட்டி கேட்டார். இதனால் ஆத்திர மடைந்த அந்த வாலிபர் மூதாட்டியை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் ரஞ்சித்தை கைது செய்தனர்.

பஸ் ஸ்டாப் அருகே மயங்கி விழுந்து மரணம்:போலீஸ் விசாரணை

மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் 49.இவர் தெற்கு வாசல் பஸ் ஸ்டாப் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாபர் ஜாதிக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய உறவினர் சாகுல் ஹமீது தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர் சாதிக்கின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீண்ட நாள் நோய்வாய்பட்டவர் விஷம்குடித்து தற்கொலை

மதுரை, மாட்டுத்தாவணி எதிரே உயர்நீதிமன்ற அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாரதிராஜா 41. இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி ஹேம சிவரஞ்சனி கே புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை கீரைத்துரை போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் சந்தான போஸ். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் பத்ர காளியம்மன் கோவில் தெரு ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது சந்தேகப்படும் படியாக பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தார். பிடிபட்ட வாலிபர்களிடம் சோதனை செய்து விசாரணை நடத்தினார். அவர்கள் கொலை செய்யும் திட்டத்துடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கீரைத்துரை வேத பிள்ளை தெரு முத்துராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி 24, புது மகாலிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் 22 என்று தெரிய வந்தது .அவர்கள் அரிவாள் ஒன்றையும் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள் எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகரூ 65 லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சரவணன் என்பவர, மதுரை கே புதூர் கணேசபுரம் தெரு சீனி முத்தையா மகன் ராஜு 54. என்பவரிடம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராஜு, கடந்த 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ 65லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், சொன்னபடி அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். இதையடுத்து கொடுத்த பணத்தை கேட்டபோது, திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து ராஜு, கே புதூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனிடம் செல்போன் பறிப்பு:வாலிபர் கைது

மதுரை கே புதூர் காந்திபுரம் எஸ்.ஆர்.என். நகரை சேர்ந்தவர் போஸ் மகன் அய்யனார் 17. இவர் அந்த பகுதியில் காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கே.புதூர் மகாலட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த குருசாமி மகன் ஜெயராமன் என்ற எலி ஜெயராமன் 27 என்ற வாலிபர் அய்யனாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டார். இது குறித்து அய்யனார் கே.புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த வாலிபர் ஜெயராமனை கைது செய்தனர்.

பெயிண்டர் தவறி விழுந்து மரணம்

மதுரை தத்தனேரி வைத்தியநாதபுரம் சாலை புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பையா 54. இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அச்சம்பத்து பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலமாக அடிபட்டு சுய நினைவு இழந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழி யிலேயே பெயிண்டர் கருப்பையாஉயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி நாகஜோதி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!