பெயிண்ட் விளம்பரத்திற்கு எதிர்ப்பு: வண்ணம் தீட்டுவோர் ஆர்ப்பாட்டம்

பெயிண்ட் விளம்பரத்திற்கு எதிர்ப்பு: வண்ணம் தீட்டுவோர் ஆர்ப்பாட்டம்
X

பெயிண்ட் நிறுவன விளம்பரத்தை தடை செய்யக்கோரி, மதுரை, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெயிண்ட் நிறுவன விளம்பரத்தை தடை செய்யக்கோரி, தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர் ஓவியர் முன்னேற்றக் கழகத்தினர், மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர், ஓவியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது, தொலைக்காட்சிகளில் வரும் பெயிண்ட் விளம்பரத்தில், "எல்லாத்தையும் அவர் பாத்துக்குவார்" என்ற விளம்பரத்தின் மூலம் தங்களின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர். அத்துடன், அந்த விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோம் முன்னேற்ற கழக மாநிலத் தலைவர் உமாமகேஸ்வரன், செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் சத்ய பிரபு மற்றும் யோகேஸ்வரன் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story