மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தை வரலாற்று நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்

மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தை வரலாற்று நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்
X

 வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாப்பட்டது,  

136 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இந்த பாலத்தை மதுரையின் வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும்

மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டுமென வைகைநதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம் 8.12.2021 ஆண்டோடு 136 ஆண்டு நிறைவு பெறுகிறது. அதை கொண்டாடும் வகையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கேக் வெட்டப்பட்டது, இந்த நிகழ்ச்சிக்கு, வைகை நதி மக்கள் இயக்கத்தலைவர் ராஜன், தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர். கேக் வெட்டி தொடக்கி வைத்தார்.

136 ஆண்டு தொடர்ந்து மக்கள் பயன்படுத்தப்படும் இந்தப்பாலம் தற்போது சிதலமைடந்து வருகிறது.இந்த பாலத்தின் வட்ட வடிவ தூண்கள் 7,8, தூண்கள் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டது உள்ளது.பாலத்தின் கைப்பிடி சுவர்கள் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பெயர்ந்துள்ளது. நூறு ஆண்டு உள்ள கட்டிடங்கள் பாரம்பரிய சின்னமாக அரசு அறிவித்து வரும் நிலையில், 136 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இந்த பாலத்தை மதுரையின் வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்பட்டது.

இதில், சமூக சேவகர் .இல.அமுதன் ,வழிகாட்டி மணிகண்டன், நீர் நிலைகள் அபுபக்கர், .ஹக்கீம், சமூக ஆர்வலர் .சங்கரபாண்டி, மக்கள் சேவகன் அசோக், அறிவுச்செல்வம், பார்த்தசாரதி, மணிகண்டன், பழனிவேல்ராஜன், திருமங்கலம் கார்த்திக், பாலன், செந்தில், கோபிநாத் உட்பட சமூக ஆர்வலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
what can ai do for business