மதுரை மதிச்சியம் வீர காளியம்மன் ஆலய பொங்கல் விழா

மதுரை மதிச்சியம் வீர காளியம்மன் ஆலய பொங்கல் விழா
X

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

மதுரை மதிச்சியம் வீர காளியம்மன் ஆலய பொங்கல் விழா நடைபெற்றது.

மதிச்சியம் வீரமா காளியம்மன் கோவில் திருவிழா

மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலய பொங்கல் விழா, சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி, தினசரி மாலை 7 மணி அளவில் விநாயகர், நாகம்மன், வீரமாகாளியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை இரவு, மதுரை மதிச்சியம் வைகை ஆற்றில் இருந்து,சக்தி கிரகம் புறப்பட்டு, ஊரின் முக்கிய விதிகள் வலம் வந்து, கோவிலை வந்து அடைந்தது. விழாவை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தினர். இதை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மதிச்சியம் வீரமாகாளியம்மன் ஆலய விழா குழுவினர், மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு