மதுரையில் லாரி திருட்டு: கர்நாடக வாலிபர் கைது

மதுரையில் லாரி திருட்டு: கர்நாடக வாலிபர் கைது
X
மதுரையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள லாரி திருடியது தொடர்பாக, கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர், 44. இவருக்கு சொந்தமான ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள லாரியை பைபாஸ் ரோட்டில் உள்ள டவுன் ஒன்றின் முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த லாரி திடீரென்று திருடு போய்விட்டது.

இது குறித்து, எஸ் எஸ் காலனி போலீசில் பாஸ்கர்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, லாரியை திருடிய கர்நாடக மாநிலம் ராம்சாகர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணாரெட்டி மகன் ராமரெட்டியை 37 என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!