திருமங்கலம் அருகே பழமையான ஆலயத்தில் குடமுழுக்கு
திருமங்கலம் அருகே, வடகரை புதூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தையா அய்யனார் திருக்கோயிலில் நடந்த குடமுழுக்கு
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, வடகரை புதூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தையா அய்யனார் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
இத் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் , வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ,யாகசாலை அமைக்கப்பட்டு, வேத விற்பனர்களால் தீப , தூப ஆராதனைகளுடன் கலச நீர் எடுத்துவரப்பட்டு பூஜித்த பின்பு , கோபுர கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதனை த் தொடர்ந்து , கோவிலின் உட்புறத்தைச் சுற்றி பரிகார சுவாமிகள் அமைக்கப்பட்டு அவைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தகும்பாபிஷேக விழாவில், திருமங்கலம், கள்ளிக்குடி , டி. கல்லுப்பட்டி , அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu