சமயநல்லூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா : முன்னாள் அமைச்சர் பங்கேற்பு ..!

சமயநல்லூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா :  முன்னாள் அமைச்சர் பங்கேற்பு ..!
X

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கியபோது 

சமயநல்லூரில்,கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் மு காளிதாஸ் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு வாங்கித் தந்தது.

வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை இன்றைக்கு மன அழுத்தத்தில் நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நேற்றைய பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவர் சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சித்தம் கலங்கியது போல் பேசுவது அவர்களுக்கு தெரியாது மற்றவர்களுக்கும் புரியாது ஆதரவும் இருக்காது. பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார்.

எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாமல் பதவி வெறியில் சித்தம் கலங்கிய அண்ணாமலை மனநல மருத்துவர் அணுக வேண்டும் அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம் மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம். அண்ணாமலை தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.! இனிமேலும் செய்யப் போவதில்லை. ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு உளறுகிறார் அண்ணாமலை.?

தமிழக பாஜக தலைவராக வந்த அண்ணாமலை அவிழ்த்து விட்ட கட்டுக் கதைகள் தமிழக மக்களுக்கு சாத்தியமில்லை என தெரிய வந்துள்ளது. தனது முதல்வர் கனவு பறிபோயிடும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை உளறி வருகிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அம்மாவின் இல்லத்திற்கு தேடி வந்தவர் மோடி., தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கினார். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கினார்.

தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் பெற்றுத்தந்திடாத பைத்தியக்கார ஆட்டோபஸ் அண்ணாமலை மக்களுக்கு எந்த திட்டமும் வழங்கிட மாட்டார்கள். தான் சார்ந்த கட்சியை பின்னுக்குத் தள்ளி அனைத்து கட்சிகளையும் அளிப்பேன் ஒழிப்பேன் என ருத்ர தாண்டவம் ஆடும் அண்ணாமலை.? தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும்.?

மத்திய அரசின் நிதி நிலை பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காததற்கு அண்ணாமலை சீறி எழுந்து இருக்கா வேண்டாமா.? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு.? என மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு வாய் திறக்கவில்லை.!

உங்களுடைய தகுதி தராதரம் உங்கள் பேச்சிலேயே உள்ளது. நிறைகுடம் தழும்பாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நிறைகுடம். நீங்கள் காலி தகர டப்பா.? காலி தகர டப்பா சத்தம் எழுப்பும். அந்த சத்தத்தினால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

நீங்க சுத்த தமிழனாக இருந்திருந்தால் நீங்கள் கர்நாடகாவில் வேலை செய்யாமல் தமிழ்நாட்டில் வேலை செய்திருக்க வேண்டும்

என் சேவை வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தான் இருக்கும் இல்லையென்றால் பதவி தேவையில்லை வேண்டாம் என்று நீங்கள் சொல்லியிருந்தால் இந்த அண்ணாமலை பச்சை தமிழன் என ஏற்றுக் கொள்ளலாம் பச்சை துரோகியாக கர்நாடகாவில் சேவை செய்துவிட்டு தமிழினத்தை கேவலமாக பேசி இன்று பாஜகவில் நியமன பதவி வைத்துக்கொண்டு வாய் சவுடால் பேசும் அண்ணாமலை உரக்க பேசினால் உண்மையாகி விடாது.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊமைகள் போல நீங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்ற அவதார புருஷன் போல மூன்று ஆண்டுகளில் இவ்வளவு வாய்ச்சவடால் எதற்கு? அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ஆட்டோபஸ் அண்ணாமலை பைத்தியமே..ஒரு கவுன்சிலர் பதவியில் நின்று வெற்றி பெற முடியாத அண்ணாமலை.? நாகரிகமான முறையில் பேசுவதற்கு நீங்கள் யாரிடமும் பயிற்சி எடுக்க வில்லையா. அளிப்பேன் ஒழிப்பேன் என்ற அரசியல் பேச்சு இதுவரை நாங்கள் பார்த்ததில்லை கேட்டதில்லை

அளிப்பேன் ஒழிப்பேன் என்று உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது அதிகாரம் மக்களிடத்தில் தான் உள்ளது. மக்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை அளித்தார்களா? பகல் கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் பகல் கனவில் முதல்வராகவும், பிரதமராகவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.!

நாலரை ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் பழித்து இழுத்து பேசினால் உங்கள் நாக்கு அழிந்துவிடும் அப்படி பேசி உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்.!

கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு.? கடைசியில் குடல் வற்றி செத்துப்போன கொக்கு போல அண்ணாமலையின் முதல்வர் கனவு பறிபோகும். அண்ணாமலையின் பேச்சு தமிழகம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களிலும் முகத்தை சுளிக்கும் வகையில் உள்ளது.

பாஜகவை வளர்க்க மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக மக்களின் வெள்ள நிவார நிதிநிலை அறிக்கையில் ரத்து செய்யப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிதியை பெற்று தருவதில் முயற்சியை எடுங்கள். செவாலியர் சிவாஜியை விட உலகமாக நடிப்பு அண்ணாமலையின் நடிப்பு.

மேடையில் பேச மக்கள் உங்களுக்கு அங்கீகாரம் தரணும். ஒன்றரை கோடி மக்கள் வாக்களித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் அதிகாரம் கொடுத்து மேடையில் பேச அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் உங்களைப்போல நியமன பதவியை பெற்றுக் கொண்டு பதவிக்கு வரவில்லை.

நீங்கள் பதவியேற்ற பிறகு பாஜகவில் எந்த தலைவராவது வெளியே தெரிகிறார்களா பாவம் அந்த அக்கா தமிழிசை வெளியே தெரிவதில்லை. பாஜக அண்ணாமலையை மட்டுமா நம்பி இருக்கிறது? எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ தலைவர்களை பின்னுக்கு தள்ளி இன்றைக்கு பாஜகவை உருவாக்கியவர் இவர் அப்பா என்றும் அதை வழிநடத்துவர் இவர்தான் என்றும் முன்னிறுத்துகிறார்.

ஆரோக்கியமான அரசியல் நாகரீகமான அரசியல் பண்பாடு விமர்சனம் செய்ய வேண்டும் அதுதான் தலைமை பண்புக்கு ஒரு அடையாளம். நீங்கள் வைத்திருக்கக் கூடிய மாநிலத் தலைவர் பதவியை கண்ணிய குறைவோடு நடத்துகின்ற அளவில் உங்கள் பேச்சு உள்ளது. அதிமுக கட்சியை டெண்டர் கட்சி என்று கூறுகிறீர்கள் ஆனால் உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி கட்டப்பஞ்சாயத்து கொலை கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் உங்கள் அடைக்கலத்துடன் பாஜகவில் உள்ளனர்.

ஒரு பைசா லஞ்சம் வாங்காத அண்ணாமலை தமிழகத்திற்கு என்ன பெற்றுத் தந்திருக்கிறார் என்று குறிப்பிடுங்கள் நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம். அரசியல் நாகரிகம் இல்லை உழைப்பு இல்லை. பாஜகவின் 100 ஆண்டு கட்சியில், 3 ஆண்டு என்ட்ரி தாமதமான என்ட்ரி இன்றைக்கு கோகுல அஷ்டமி தமிழக மக்களை இந்த கிருஷ்ண பரமாத்மா காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது