மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி சிறப்பு பூஜை, திருமஞ்சனம்

மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி சிறப்பு பூஜை, திருமஞ்சனம்
X

அலங்காநல்லூர் அருகே வெள்ளிமலையில், கூடாரவல்லி நிகழ்வை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

மதுரை பகுதியில் உள்ள கோயில்களில் கூடாரவல்லி சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனம் எளிமையாக நடைபெற்றன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, வெள்ளிமலை மேல் வெங்கடாசலபதி ஸ்ரீதேவி பூமிதேவி கோவில் உள்ளது. இங்கு இன்று, கூடாரவல்லி பூஜை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைணவ ஆலயங்களில், கூடாரவல்லி நிகழ்வை முன்னிட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை மேலமடை தாசில்தார் நகர், சித்தி விநாயகர், சௌபாக்யா விநாயகர் ஆலயங்களில், லட்சுமி நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!