திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி: காப்பு கட்டுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி: காப்பு கட்டுடன் தொடக்கம்
X

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது:

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா பிரசித்து பெற்றது. 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.

சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி ண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெறும்.

இன்று காலை 8 மணிக்கு திருக்மகோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர், முன்னதாக, சுப்ரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை இருவேளையும் சண்முகார்ச்சனை நடைபெறும். விழாவை முன்னிட்டு, சண்முகர் தினமும் வெள்ளை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ஆம் தேதி கோர்த்தான அம்பிகையிடம் இருந்து சூரபத்மனை அழிக்க " சக்திவேல்" வழங்கும் விழா நடைபெறும். பின்னர், வரும் 30 தேதி மாலை சூரபத்மனை அழிக்க முருகன் சக்திவேலை கொண்டு சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சூரபத்மனை அழிக்கும் "சூரசம்ஹார லீலை" நிகழ்ச்சி நடைபெறும்.

வரும், 31ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவினை ஒட்டி முருகன் சட்டத்தேரில் வீதி உலா பவனி வருவார்.

திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் மண்டம் மற்றும் சஷ்டி மண்டபங்களில் தங்கி காப்பு கட்டி 7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற் கொள்வார்கள்.

கந்த சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக, எலுமிச்சை சர்கரை பழச்சாறு,பால். வாழைப்பழம் மற்றும் திணைமாவு ஆகியவை வழங்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் ஆங்காங்கே பெரிய அளவிலான தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு சண்முகார்ச்சனை. மற்றும் பூஜைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பழமொழியாகவே உள்ளது. "சஷ்டியிரு(விரதமிரு)ந்தால் அகப்பையில் குழந்தை வளரும்" என்பதே சட்டியிலிருந்தால் அகப்பைக்கு வரும் என மாறியுள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil