சோழவந்தான் பகுதியில், காமராசர் பிறந்த தின கொண்டாட்டம்..!

சோழவந்தான் பகுதியில், காமராசர் பிறந்த தின கொண்டாட்டம்..!
X

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காமராசர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்தாநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது.

சோழவந்தான் பகுதியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான், ஐயப்பா நாயக்கன்பட்டி,மேலக்கால், தேனூர் உட்பட இப்பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த தின விழா சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், இந்து நாடார் உறவின்முறை சார்பாக காமராஜர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல்தலைவர் வையாபுரி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தரபாண்டியன்,நிர்வாகி மனோகரன் என்ற நாகராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு கேசரி வழங்கினார்கள். பின்னர், ஊர் மக்கள் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு டிக்ஷனரி வழங்கப்பட்டது.

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராம கமிட்டி செயலாளர் வி. பி .கந்தசாமி தலைமையில் கிராம மக்கள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள். சோழவந்தான் இந்துநாடார் உறவின்முறை பரிபாலன சங்கத் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில், செயலாளர் ராஜகுரு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.ம.மு.க நகரச்செயலாளர் திரவியம்,வாடிப்பட்டி நகரச்செயலாளர் மதன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றியச்செயலாளர் விரும்பராஜன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மாவட்டதுணைச் செயலாளர் வீரமாரிபாண்டி, இனிப்பு வழங்கினார். நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் சங்கர்,முத்தீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொகுதி செயலாளர் சக்கரபாணி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தலைவர் சங்கிலிமுருகன் இனிப்புவழங்கினார்.பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் லதாகண்ணன் இனிப்புவழங்கினார். பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்யபிரகாஷ், குருசாமி,முத்துச்செல்விசதீஷ்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரவை செயலாளர் ராஜபாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் மலைச்சாமி கேபிள் மணி உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் கட்சி சார்பாக சங்கர பாண்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலக்கல் கிராமத்தில், நாடார் இளைஞர் பேரவை சார்பாக காமராஜர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்தனர்.

இதில், இனியா மொபைல் உரிமையாளர் மணி தலைவர் ராஜா,செயலாளர் பிரகாஷ் மற்றும் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!