சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா : முளைப்பாரி ஊர்வலம்..!
கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம்
சோழவந்தான்:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 11ஆம் நாள் மண்டக படி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மண்டக படிக்கு வந்து. அங்கு பால், தயிர் உள்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றது.இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், தெற்குரதவீதி மேலரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் தங்கராஜ் பிள்ளை,செயலாளர் அருணாசலம்,முன்னாள் சேர்மன் எம்கேமுருகேசன், ஆர்எம்எஸ் காலனி இன்ஜினியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி தலைவர் அன்பு வரவேற்றார்.
மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். விழா குழு பொருளாளர் பாஸ்கர் என்ற ராஜசேகரன், சங்க துணை செயலாளர் பெரியசாமி, சங்க பொருளாளர், பாலசுப்பிரமணியன், முன்னாள் பொருளாளர் மணிகண்டன், நாகேந்திரன், விவசாய த்துறை மாணிக்கம், வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், துணைச் செயலாளர் கருந்தேஸ்வரன், விழா குழு உறுப்பினர்கள் பார்த்திபன், காளிதாஸ், சரவணன், சண்முகம், சசிகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், சிறப்பு நன்கொடையாளர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கவுன்சிலர்கள் தண்டபாணி, சௌந்தரபாண்டியன் ஆகியோர் நன்றி கூறினர். இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.கேரளா இசை கலைஞர்கள் செண்டை மேளம் மற்றும்மதுரை கே ஆர் கே வழங்கும் ஸ்ரீ சப்தகிரி தெய்வீக சாமி ஆட்டம் நடந்தது. சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் உட்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu