மதுரை அருகே, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பெருந் திருவிழா!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலயம்.
ஜெனகை மாரியம்மன் கோயில் விழா:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி பெருந்திருவிழா 3 மாத கொடியேற்றம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வருடம் தோறும் வைகாசி மாதம் நடைபெறும். தமிழகத்தில் 17 நாட்கள் நடைபெறும் முக்கிய திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது பங்குனி மாதம் 3 மாத கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மூன்று மாத கொடியேற்ற விழா வருகின்ற 15 .4. 2024 திங்கட்கிழமை அன்று கோவில் முன்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கான கொடியேற்றம் 10.6. 2024 அன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளான பால்குடம் அக்னிச்சட்டி 18 6 2024 ந்தேதியும் பூக்குழி நிகழ்ச்சிகள் 19 6. 2024ந் தேதியும் திருத் தேரோட்டம் 25/6/2024 ஆம் தேதியும் தீர்த்தவாரி நிகழ்ச்சி 26 6.2024 தேதியும் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தக்கார் சங்கரேஸ்வரி, செயல் அலுவலர் இளமதி மற்றும்திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu