கள்ளிக்குடியில் அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பா..?

கள்ளிக்குடியில் அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பா..?
X

திருமங்கலம் அருகே, அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பு என, மாவட்ட ஆட்சியிடம் புகார்

கள்ளிக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிலம் கையாடல் செய்யப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளிக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிலம் கையாடல் செய்யப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை :

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில்,டி.கொக்குளம் ஊராட்சியில் வசிக்கும் அழகு மணி என்பவர்,மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அதில் , கூறியிருப்பதாவது :

தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்தபோது 2006 ஆம் ஆண்டில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து அதன்படி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கும் திட்டத்தின் கீழ் எனது தாயார் நல்லம்மாள் பெயரில் தமிழக அரசால் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

பின்னர் எனது தாயார் 2014 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, அழகு மணியான எனது பெயருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மற்றொருவர் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.

நான் நேரில் சென்று கேட்டபோதும் தர மறுக்கிறார். இதற்கு உறுதுணையாக சிலர் செயல்படுகிறார்கள் எனவே, மாவட்ட ஆட்சியர், தலையிட்டு அரசியல் வழங்கப்பட்ட அந்த இடத்தை மீட்டுத்தருமாறு கேட்டுள்ளார். கள்ளிக்குடியில் கலைஞர் கொடுத்த இடத்தை கையாடல் செய்துள்ளார் என்று செய்தி பரபரப்பாக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!